|
| |
அன்பும் நன்றியும் வணக்கமும்
ஓராண்டிற்கு முன்பு உயிர்மையைத் தொடங்கியபோது தமிழ் எழுத்தாளர்களோடும் வாசகர்களோடும் கொண்ட நீங்க முடியாத பிணைப்புதான் ஒரே உந்து சக்தியாக இருந்தது. ஒரு மாத இதழின் சவால்கள் குறித்து எங்களுக்குப் பெரிய உத்தேசங்கள் இருக்கவில்லை.
|
| |
பலி
கும்பகோணத்தில் தொண்ணூறு குழந்தைகள் உயிரோடு மரண உலைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் ஒரு மறக்கமுடியாத கொடுங்கனவாகிவிட்டது. மரணமும் அழிவுகளும் மரத்துப்போன மனங்களில்கூட கருகிய குழந்தைகளின் உடல்கள் ஆழமான காயமாகியிருக்கிறது.
|
| |
மார்லன் பிராண்டோ: மகத்தான தருணங்கள்
"அன்னையின் ஆணை' என்ற படத்தைப் பார்த்தபின் அறிஞர் அண்ணா சிவாஜி கணேசனை "தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ' என்று பாராட்டியதாகச் சொல்வார்கள். "அன்னையின் ஆணை" 1958இல் வெளிவந்தது. அது வெளிவந்தபோது அண்ணா மட்டுமல்ல, ஆங்கில மொழிப் படங்களைக் கரைத்துக் குடிக்கும் என் நண்பர் ஒருவர்கூட அப் படத்தைப் பாராட்டியதோடு என்னையும் கட்டாயம் போய்ப் பார் என்றார்.
|
| |
மார்லன் பிராண்டோவின் அமைதியற்ற பயணம்
"ஒரு நடிகன் வெற்றி பெற முடியாது போனால் அவன் குஷ்டரோகிக்கும் கீழாக மதிக்கப்படுவான்' என்றார் ஒரு ஹாலிவுட் நடிகர். நடிப்பு என்பது ஒரு தொழில். வெற்றி தோல்வி என்பது எல்லாவற்றிற்கும் போலவே அதற்கும் பொதுவானது. நடிப்பில் தோற்றுப்போனவனுக்கு மட்டும் ஏன் அத்தகைய நிலைமை ஏற்படவேண்டும்?
|
| |
மங்கலம், குழுஊக்குகறி, இடக்கரடக்கல்
சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். உண்மையில் உலகின் கோடிக்கணக்கான மனிதருக்குத் தனித்தனி முகங்கள் என்பது போல பெண்களுக்குத் தனித்தனி முலைகளாக இருக்க வேண்டும்.
|
| |
சிவராம காரந்த்: அறத்தின் முடிவற்ற தேடல்
என் கல்லூரி நாட்களில் மலையாளம் வழியாக டாக்டர் சிவராம காரந்தை வாசித்தபோது அவர் சலிப்பூட்டும் வறண்ட யதார்த்தத்தின் சித்தரிப்பாளராக எனக்குப் பட்டார். மண்ணையும் கல்லையும் செரிக்கும் முதிரா வாசிப்புப் பருவத்தில்கூட "மண்ணும் மனிதரும்' நாவலை முடிக்க எனக்கு பதினொரு நாள் ஆயிற்று.
|
| |
போர்ஹேயின் புலிகள்
"ஒவ்வொரு பொருளும் தன் ஸ்திதியிலேயே இருக்கவே ஆசைப்படுகிறது. ஒரு கல் எப்போதும் கல்லாகவேயிருக்க விரும்புகிறது. புலி தானொரு புலியாகயிருக்கவே ஆசைப்படுகிறது' என்கிறார் ஸ்பினோசா. ஆனால் வாழ்வு எந்த உயிரையும் தன் இயல்பிலே வைத்திருப்பதில்லை. எண்ணிக்கையற்ற உருமாற்றங்கள், செயல்மாறுதல்களாகவே நீள்கிறது.
|
| |
முடிவுகளுக்கு வெளியே: எல்லோரும் அமெரிக்கரே
ஜ°லை 4ஆம் தேதி, அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன நாள். இவ்வாண்டும் அது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி புஷ் மகிழ்ச்சி பொங்க தன்னாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
|
| |
பின் குறிப்பு: ஜி. நாகராஜனும் வி. மாலாவும்
எழுத்தாளர் ஜி.நாகராஜனுக்கு வி.மாலா என்ற முன்னாள் நடிகையை ஒருவேளை தெரிந்திருக்கலாம். அபூர்வமாகவாவது திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார் என்பதற்கு அவருடைய எழுத்துக்களில் அடையாளங்கள் இருக்கின்றன.
|
| |
ஊடகங்களும் காட்டுயிர்களும்
தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைப் போர்த்தியிருந்த முதுபெரும் மழைக் காடுகளில் இப்போது எஞ்சியிருப்பது ஆறு விழுக்காடு பரப்பு மட்டுமே. வெட்டுமரத் தொழிலும் காப்பி, தேயிலை, ஏலக்காய் போன்ற தோட்டக்கால் வேளாண்மையும், அணைக்கட்டுகளும், சாலைகளும் காடுகளைக் காவு கொண்டு விட்டன.
|
|
>>More Headlines
|