Saturday, Oct 11, 2008
About us
|
Feedback
|
Advertise
Home
Astrology
Business
Food
Games
Movies
News
Shopping
Sports
Videos
Untitled Document
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு.
தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டென கொண்டாட முடிவு.
சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட பெரியார் சிலையுடன் கூடிய சமத்துவபுரங்கள்
தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு.
சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.
பன், ரஸ்க், சோயா எண்ணெய், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு – மற்றும் பல பொருட் களுக்கு வரி குறைப்பு
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - 25 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை அரசே வழங்கும்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.
கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி 4 ரூ ஆகக் குறைப்பு.
சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்
திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்
புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி புதிய வருவாய் வட்டங்கள்.
திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள்– தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம்.
வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்
3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்
ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் - ரூபாய் 15,000லிருந்து ரூபாய் 20,000 ஆக உயர்வு.
ரூபாய் 6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றிதழ் தேவையில்லை. 2
சிறு வணிகம் செய்யும் மகளிர் உட்பட 2 இலட்சம் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 50 கோடி கடன்.
கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூபாய் 15 கோடி கடன் அறவே ரத்து.
ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூபாய் 5 கோடி அறவே தள்ளுபடி.
கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து – ஏற்கனவே உள்ள நிலுவை 16 கோடி ரூபாய் முழுவதும் தள்ளுபடி.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் கடனைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.
50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து
விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்
புத்தகப் பதிப்புத் துறையில் பணிபுரிவோருக்கு ஒரு தனி நல வாரியம்
கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.
நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்
அரவாணிகள் நல வாரியம் - மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பரிந்துரை செய்ய நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு நியமனம்
விபத்தின்றி ஓட்டும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு.
கழிவு நீர்க் குழாய்களில் தூய்மைப்பணி புரிவோருக்கு பாதுகாப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை.
கழிவு நீர் குழாய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.
27 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் குடும்பங்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தின் சிறப்புகளை ஒருங்கே சித்தரிக்கும் “கையளவில் தமிழகம்” கவின் கலைக் கூடமாக!
சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் - ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலையம். 3
தமிழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ மாணவியர்களுக்கு கணினி பரிசு
சமுதாயக் கல்லூரிகளில் ஏழை மாணவ மாணவியருக்கு ரூபாய் 1000 உதவித்தொகை
எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க அரசின் சார்பில் அறக்கட்டளை - ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு
5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச்சேவை மையங்கள் - அங்கே அரசு சான்றிதழ்கள், விண்ணப்பங்கள் பெறவும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி
மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைக்கப்படும்
குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.
வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தரும் புதிய செம்மை நெல் சாகுபடி 18.75 லட்சம் ஏக்கரில் அறிமுகம்.
அனைத்து மாவட்டங்களுக்கும் துல்லிய பண்ணை முறை விவசாயம் விரிவாக்கம்.
விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரங்கள் வாங்க 25 சதவிகித மானியம்.
இந்த ஆண்டிலிருந்து பயறுவகைகளை அரசே கொள்முதல் செய்யும்.
ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பத்தாயிரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் - 10 கோடி ரூபாய் சுழல்நிதியாக அரசு நிதியுதவி.
ரூபாய் 150 கோடியில் கல்லணைக் கால்வாய் மேம்பாட்டுத் திட்டம்.
ரூபாய் 12 கோடியில் காளிங்கராயன் கால்வாய் மேம்பாட்டுத் திட்டம்.
காவிரியுடன் மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளான – அக்னியாறு - கோரையாறு -– பாம்பாறு –- வைகை –- குண்டாறு ஆகிய வற்றுடன் இணைக்கும் திட்டம்.
ரூபாய் 369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்.
ரூபாய் 550 கோடி செலவில் 48,500 தடுப்பணைகள், ஊருணிகள் அமைக்கும் பெருந்திட்டம்.
ரூபாய் 12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.
ரூபாய் 211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.
அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - ரூபாய் 2 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை. 4
அரசு அலுவலர்களுக்கு 47 சதவீதமாக 1.1.2008 முதல் அகவிலைப்படி உயர்வு.
ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூபாய் 50,000லிருந்து ரூபாய் ஒரு இலட்சமாக உயர்வு.
10,000 உயர் கலப்பின கறவைமாடுகளை 5000 பெண்களுக்கு வழங்கும் திட்டம்.
அனைத்து காவல் நிலையங்களுக்கும் இணைய வசதி.
போலீஸ் கமிஷனின் பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவன செய்யப்படும்
ரூபாய் 100 கோடியில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்படும்.
புதிய சட்டமன்ற வளாகம் கட்ட வரும் நிதியாண்டில் ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு
100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.
100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.
450 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 312 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி – புதிய திட்டம் - ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு
100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணித ஆய்வகங்கள் - ஆய்வக மற்றும் அறிவியல் சாதனங்கள்
500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள்
100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் நூலக வசதிகள்
100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 606 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 2200 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் - ரூபாய் 71 கோடி ஒதுக்கீடு
அரசு கல்லூரிகளில் 500 கூடுதல் வகுப்பறைகள்
அரசு மகளிர் கல்லூரிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள்
அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் டிஜிடல் எக்ஸ்ரே (னுபைவையட ஓ-சயல) கருவிகள்
வேலூர் மற்றும் தேனியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள்
தமிழகமெங்கும் ஒரே தொலைபேசி எண் மூலம் அவசர மருத்துவ ஊர்தி சேவை (ஹஅரெடயnஉந ளுநசஎiஉந)
227 அரசு மருத்துவ மனைகளுக்கு கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் (ளுயீநஉயைடளைவ) நியமனம்
இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடைபெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னையில் சிறப்பு மருத்துவ மையம். 5
தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.
ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் தொழிற்சாலையை ரூபாய் 82 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கும் திட்டம்
கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் மின்னணு மாவட்ட திட்டம் அறிமுகம்
1350 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகள் இருவழித் தடங்களாக மாற்றப்படும்.
90 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
நாகர்கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் - 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலைகள் மேம்பாடு
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை
இந்திரா வீட்டு வசதித் திட்டம் - கான்கிரீட் கூரைகள் அமைக்க தமிழக அரசு வழங்கும் கூடுதல் மானியம் ரூபாய் 12000லிருந்து ரூபாய் 20000 ஆக உயர்வு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.
மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தம் சொந்த ஊர்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓர் அறக்கட்டளை
மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு.
ரூபாய் 750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்
25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.
1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 150 கோடி சுழல்நிதி.
மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் (ளுவயவரவடிசல ளுவயவரள).
தசைச் சிதைவு (ஆரளஉரடயச னுலளவசடியீhல) நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 500 மாதாந்திர உதவித் தொகை.
காதுகேளாத குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க நிலையிலேயே பயிற்சி அளிக்கும் மையங்கள்.
அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடுதி 6
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 சதவீத வட்டி மானியம்.
கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் - நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.
காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.
பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.
கைவினைஞர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25 புதிய மாணவர் இல்லங்கள்.
25 ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களுக்கு சொந்தக் கட்டடங்கள்.
8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் - 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 400 லிருந்து ரூபாய் 450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 500 லிருந்து ரூபாய் 550 ஆகவும் உயர்வு.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மாநில அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.50,000 லிருந்து ஒரு இலட்சமாக உயர்வு.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.
சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூபாய் 40 கோடி கடன் உதவி.
350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங்கள் நவீனமயம் ஆக்கப்படும் - எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர்கள் வழங்கப்படும்.
சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடலின் அடியில் மீன் அருங்காட்சியகம்.
25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டம்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சங்கங்கள்.
தமிழக நிதிநிலை அறிக்கை
பட்ஜெட் 08: புதிய அறிவிப்பு- 2
பட்ஜெட் 08: புதிய அறிவிப்புகள்
பட்ஜெட் 08: போக்குவரத்து
பட்ஜெட் 08: பல்துறை நலன்
பட்ஜெட் 08: அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் நலன்
பட்ஜெட் 08: தமிழ் வளர்ச்சி
பட்ஜெட் 08: மகளிர் நலன்
பட்ஜெட் 08: ஊரக வளர்ச்சி
பட்ஜெட் 08: வீட்டு வசதி
பட்ஜெட் 08: நகராட்சி நிர்வாகம்
பட்ஜெட் 08: தகவல் தொழில்நுட்பம்
பட்ஜெட் 08: தொழில் துறை
பட்ஜெட் 08: மக்கள் நலவாழ்வு
பட்ஜெட் 08: உயர்கல்வி
பட்ஜெட் 08: பள்ளிக் கல்வி
போக்குவரத்துப் பாதுகாப்பு
பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு
வேளாண்மை மற்றும் கூட்டுறவு
தமிழக ஒட்டுமொத்த நிதிநிலை
வரி விலக்கும் சலுகைகளும்
2008 - 09
மத்திய பொது நிதிநிலை அறிக்கை
பட்ஜெட்: சிறப்பம்சங்கள் - 1
பட்ஜெட்: சிறப்பம்சங்கள் - 2
பட்ஜெட்: சிறப்பம்சங்கள் - 3
வருமான வரிவிலக்கு உயர்வு
விவசாய கடன்கள் தள்ளுபடி
ஐ.டி. துறைக்கு 1,680 கோடி
உள்கட்டமைப்பு: 14,000 கோடி
வேளாண் காப்பீடு: 644 கோடி
முதலீடுகளுக்கு அரசு ஊக்கம்
ராஜீவ்காந்தி கிராமத் திட்டம்
கல்வித் துறைக்கு 34,400 கோடி
வீட்டு வசதி மானியம் அதிகரிப்பு
அங்கன்வாடி: ஊதியம் உயர்வு
சிறுபான்மையினருக்கு அதிக நிதி
முன்னோடி திட்டங்களுக்கு நிதி
பட்ஜெட்: புதிய அறிவிப்புகள்
பட்ஜெட் 08: சிறப்பம்சங்கள்
சென்னைக்கு வரும் 300 கோடி
ஈரோட்டில் விசைத்தறிக் குழுமம்
எய்ட்ஸ் மருந்துக்கு வரிவிலக்கு
16 புதிய நடுவண் பல்கலைகள்
மேலும் ஒரு கோடி காப்பீடு
பாதுகாப்புத் துறை: அதிக நிதி
காமன்வெல்த்: ரூ.624 கோடி
6ஆவது ஊதியக் குழு அறிக்கை
நிதி: 2 பரிந்துரைகள் ஏற்பு
இடர்வரவு முதலீட்டு நிதியம்
வடகிழக்கின் மீது சிறப்பு கவனம்
பாசன திட்டம்: 20000 கோடி
2008 - 09
பொருளாதார ஆய்வறிக்கை
பணவீக்கம்: உயர் முன்னுரிமை
தங்க நாற்கரம் 96% நிறைவு
திறன் மேம்பாடு: அதிக கவனம்
உள்கட்டமைப்புக்கு முக்கிய பங்கு
புது ஓய்வூதியத் திட்டம் பராக்
அரசின் வரி வருவாய் கூடியது
ஆய்வறிக்கை சிறப்பம்சங்கள்
வங்கிக் கடன்கள் 1.5% கூடுதல்
இலக்கை மிஞ்சியது உற்பத்தி
அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு
சூடு பிடித்த இந்திய சுற்றுலா
ஏற்றுமதி: 70% இலக்கு பூர்த்தி
சமூகத் துறை: ஆய்வு முடிவுகள்
தொழில் துறை வளர்ச்சி 9.2%
2007 - 08
நாடாளுமன்றத்தில் பிரதீபா உரை
Home
Astrology
Business
Food
Games
Movies
News
Shopping
Sports
Videos
Copyright
Sify Ltd
, 1998-2004. All rights reserved. Sify.com hosted at
SifyHosting
India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer
|
Privacy Policy
&
Parental Guidance on pornography
|
Careers@sify
|
Advertise with us