Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
Untitled Document

செல்பேசிகள் வழியாக ரெயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யலாம்.
மும்பைக்குப் போ (கோ மும்பை) அட்டைகள், பேருந்து நிலையங்களில் விற்கப்படும்.
ஷதாப்தி விரைவு வண்டி பராமரிப்பு, வெளிப் பணி ஒப்படைப்பு செய்யப்படும்.
30 ரெயில் நிலையங்களில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் உருவாக்கப்படும்.
ரயில்வே துறையின் சொத்துகள் உயர்ந்துள்ளன. ரூ. 49,250 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்களில் ஏற்றப்படும் சரக்கின் அளவு 790 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 4000 கோடி செலவில 36000 கோச்களில் கிரீன் டாய்லெட் அமைக்கப்படும்.
ரயில், ரயில்வே பிளாட்பார்ம்களைப் பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
ரூ 500 கோடி செலவில் நடைமேடைகள் மேம்படுத்தப்படும்.
50 ரெயில் நிலையங்களில் நகரும் மின்படிகள் (எக்ஸ்கலேட்டர்) அமைக்கப்படும்.
தானியங்கி டிக்கெட் கவுன்டர்கள் 6000 ஆக உயர்த்தப்படும்.
அதிவிரைவு ரெயில்களின் வருகை நேரம், வந்து சேர உள்ள ரெயில் நிலையங்களில் திரையில் காட்டப்படும்.
எண்ணூர் துறைமுகத்துடன் ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் பரிசீலிக்கப்படும்.
காத்திருப்போர் பட்டியலில் பெயர் இருப்பினும் இ-டிக்கெட் வழங்கப்படும்.
பயணச் சீட்டு உறுதியான தகவலைச் செல்பேசி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பயணச் சீட்டு வாங்க, வரிசையில் நிற்கும் முறையை ஒழிக்க இலக்கு நிர்ணயம்.
ரெயில் நிலையங்களில் தொடுதிரை கணினிகளும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வைக்கப்படும்.
ரெயில்வே நிதி இருப்பு, ரூ.20,480 கோடிகள்.
பயணச் சீட்டுகள் வழியாகப் பெறப்படும் வருவாய், 14 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கட்டணக் குறைப்பு, அதிக எண்ணிக்கையிலான பயன்பாட்டையும் லாபத்தையும் உயர்த்தியுள்ளது.
2009க்குள்ளாக ரெயில்வே கால் சென்டர்களுடன் இணைக்கப்படும்.
ராஜ்தானி, ஷதாப்தி ரெயில்களில் அதிக வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும்.
560 ரெயில் நிலையங்களின் நீளம் அதிகரிக்கப்படும்.
மூத்த பெண்களுக்கு ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதம் சலுகை உண்டு.
எயிட்ஸ் நோயாளிகளுக்கு ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதம் சலுகை உண்டு.
பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு முடியும் வரை இலவச சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரெயில் பயணச் சீட்டுக் கட்டணம் 5 சதம் குறைப்பு.
ஏசி 3 டயர் வகுப்பு ரெயில் கட்டணம் 3 சதம் குறைப்பு
முதல் வகுப்பு ஏசி வசதி கொண்ட பயணச் சீட்டுக்குக் கட்டணம் 7 சதம் குறைப்பு
இரண்டாம் வகுப்பு ஏசி வசதி கொண்ட பயணச் சீட்டுக்குக் கட்டணம் 4 சதம் குறைப்பு
பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான சரக்கு கட்டணம் 5 சதம் குறைப்ப
அசோக சக்கரா விருது பெற்றவர்கள், ராஜ்தானி, ஷதாப்தி ரெயில்களில் இலவசமாகப் பயணிக்கலாம்.
காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக தில்லி - புனே சிறப்பு ரெயில் விடப்படும்.
எல்லா முக்கிய ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்படும்.
53 புதிய ரெயில்களும் மேலும் 10 ஏழைகள் (கரிப் ரதம்) ரெயில்களும் விடப்படும்.
16,548 பழைய ரெயில் தடங்கள் மாற்றப்படும்.
கேரளாவில் புதிதாக ரெயில் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
ரயில் திட்டம் ரூ. 11 ஆயிரம் கோடியில் இருந்து 30 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.
2009 ஆண்டில் கால்சென்டர்கள் மூலம் முன்பதிவு செய்ய வழி செய்யப்படும்.
ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
மின்சார ரயில்கள் அதிகரிக்கப்படும்.
48 புதிய கன்டெய்னர் மையங்கள் அமைக்கப்படும்.
ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
தானியங்கி சிக்னல் அமைக்கப்படும். விபத்துகளை தவிர்க்க வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும்.
மும்பை சத்ரபதி ரயில் நிலையம், பாட்னா, டில்லி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
தானியங்கி கருவிகள் மூலம் இ-டிக்கெட் வழங்கப்படும்.

ரெயில்வே பட்ஜெட் தாக்கல்
ரெயில்வே: செய்தித் துளிகள்
பயணக் கட்டணம் குறைப்பு
தமிழகத்திற்கு 2 புது ரயில்கள்
5700 பணியிடங்கள் நிரப்பப்படும்
பயணக் கட்டணங்கள் குறைப்பு
புதிதாக 53 ரயில்கள் அறிமுகம்
லாலுவின் அதிரடி அறிவிப்புகள்
ரயில் பட்ஜெட் சிறப்பம்சம்
ரயில் பட்ஜெட்: எதிர்வினைகள்
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us