| Manjari |
| |
உங்களோடு ஒரு வார்த்தை
சென்ற மாதம் நெல்லை ஜில்லா, தென்காசிக்கு அருகிலுள்ள வீ.கே. புதூர் சென்றிருந்தேன். அங்கு பிரமாண்டமான நவநீதகிருஷ்ணஸ்வாமி கோயில் உள்ளது. நான் ஐந்து வயதுச் சிறுவனாக ஓடி விளையாடிய கோயில்
|
| |
பாடிக் கரைந்த பக்தர் துக்காராம்
""தெஹ புண்ணியம் செய்த கிராமம். ஏனெனில் அங்கே நம் தெய்வம் பாண்டு ரங்கன் உறைகிறான். அங்குள்ளவர்கள் பாக்கியசாலிகள், ஏனெனில் அவர்கள் அவனது பெயரைப் பாடுகிறார்கள். இடுப்பில் வைத்த கைகளுடன் இறைவன் அங்கு நிற்கிறான். அருகில் அன்னை ருக்மிணி. வாசலருகே கூப்பிய கரங்களுடன் கருடன். வடக்கே ஓர் அரசமரம்.
|
| |
தெரிந்த பெயர் தெரியாத செய்தி
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தவத்திரு. ஞானியார் அடிகள் தென்காசிக்கு வந்திருந்த பொழுது ஒரு திருக் குறள் புத்தகம் வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்.
|
| |
புத்தகப் பகுதி
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அதைக் கேட்டுக் கொண்டிருப் பவர் தலையை மேலும் கீழும் அசைத்தால் சொல்பவரின் கருத்தை அவர் ஆமோதிக்கிறார் என்று அர்த்தம். அதற்குப் பதிலாக, தலையை இடது புறமும், வலதுபுறமும் மாற்றி மாற்றி அசைத்தால் அவர் சொல்பவரின் கருத்தை ஏற்கவில்லை என்று அர்த்தம்.கேட்டுக்கொண்டிருப்பவர் வாய் திறந்து, உங்கள் கருத்தை "ஆமோதிக் கிறேன்' என்றோ, "ஆமோதிக்க வில்லை' என்றோ சொல்லவில்லை.
|
| |
தென்கச்சி பதில்கள்
ஓர் அரசியல் மேடை. பேச்சாளர் பேசினார். மக்கள் தூங்கிவிட்டார் கள். ஒரு விசிலை எடுத்து ஊதினார். விழித்துக் கொண்டார்கள். அவர் சொன்னார்: இவ்வளவு நேரம் நல்ல கருத்துக்களைச் சொல்லிக் கொண் டிருந்தேன். தூங்கிவிட்டீர்கள்.ஒரு பயனுமில்லாத முட்டாள் தனமான செயலைச் செய்தவுடன் விழித்துக் கொண்டீர்கள். இந்த அளவுக்காவது சுயபுத்தியோடு நீங்கள் இருப்பது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்
|
| |
ஓலைச்சுவடிகள் எழுதப்பட்டது எப்படி?
நன்றாக விளைந்த பனையோலை நறுக்குகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பெற்ற சுவடிகளே பண்டைய நாளில் நூல் மூலமாக இருந்து வந்தன. எழுதப் பயன்படும் பனையோலையானது சாதாரணப் பனையோலை, சீதாளப் பனையோலை (தாளிப்பனையோலை) என இருவகைப்படும். இவற்றில் சீதாள ஓலை, சாதாரணப் பனையோலையைக் காட்டிலும் நீளமும் அகலமும் உடையது, மெலிவானது, விரைவில் கறுத்துவிடக் கூடியது.
|
| |
நண்டு
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைபடைத்த திவ்யதேசங் களில் ஒன்றானது திருநறையூர். (கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார் கோயில்). இந்தத் திவ்ய தேசத்திற்குப் பெரிய திருமொழியில் (6&4 தொடங்கி 7&3 முடிய) 100 பாசுரங்கள் மங்களாசாஸனமாக அமைந்துள்ளன. இயற்கை எழிலை இறைமையோடு சேர்த்து மங்களா சாஸனம் செய்வது திருமங்கை யாழ்வாருக்கே உரித்த அனுபவமாகும்.
|
| |
சத்ரபதியின் புகழ் பாடும் மராட்டிய கோட்டைகள்
சத்ரபதி சிவாஜி மன்னரால் சுமார் 350 கோட்டைகள் கட்டப் பட்டன. இன்றும் அவை இயற் கையின் சீற்றமான காற்று, மழை, இடி, மின்னல், வெள்ளத்திற்குப் பயப்படாமல், சத்ரபதியின் புகழ் பாடுகின்றன. இக்கோட்டைகள் மூரத் & சன்ஜிரா, சிவனேரி, சுர்வண கார்க், டோராணா, ராய்காட், டியோகிரி, கொண்டன்னா, டே ரோன், பிரதாப் காட், புரந்தர் பகுதி களில் இன்றும் காணலாம்
|
| |
மலையாளச் சிறுகதை: மரணத்தின் நிழலில்...!
உடலில் பாதியை நீரோட்டத்தின் இளஞ்சூட்டிற்குள் மறைத்துக் கொண்ட தவளை, நனைந்த புற்களுக்கிடையே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. வெளிச்சம் வயலில் பரவுவதற்கும், அருகே இருக்கும் செடிகளுக்கிடையிலிருந்து அசை வை உணர்ந்து, தவளை திரும்பிப் பார்த்தது.
|
| |
இலக்கியமே உயிர்த்துடிப்பு
நான் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் முதல் இடத்தில் முதல் வகுப்பில் தேறிய கையோடு, என் தந்தை காலமாகிவிட்டார். இதனால் என்னையும், என் தாயையும், என் இரண்டு தம்பிமாரையும் பராமரிக்கும் பொறுப்பை, எங்களிடம் பரிவுள்ள அம்மான் ஏற்க வேண்டியதாயிற்று
|
|
>>More Headlines
|