|
 |
| Sify Home >> News & Info >> Tamil >> Manjari >> December 2006 |
 |
|
|
|
| |
களை கட்டும் சென்னை சங்கீத சபாக்கள்
இசை சபாக்களிலேயே மிகப் பழமையான பார்த்தசாரதி சபாவின் 106 வது இசை விழா இந்த வருடம் நடத்தப்படுகிறது. இந்த இசை விழாவில் ஆண்டுதோறும் சங்கீத கலா சாரதி என்ற உயரிய விருது மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
|
| |
சினிமாவில் கர்நாடக இசை
அந்த நாளில் கல்கி, கர்நாடகம் என்ற புனை பெயரில் சினிமா, கர்நாடக சங்கீதம் இரண்டைப் பற்றியும் கிழிகிழியென்று கிழித்து வந்தார். அவர் எடுத்த பல அவதாரங்களில் "கர்நாடகமும்' ஒன்று.
நன்கு நினைவிருக்கிறது. 1962 ஆம் வருடம் திருத்தணியில் துணைக் கருவூலத்தில் சீனியர் ஊழியராகப் பணியாற்றி வந்தேன். எந்தவிதப்பொழுதுபோக்குமில்லை. பத்திரிகைகள், புத்தகம் படிப்பது தவிர, இரண்டு அல்லது மூன்று வாரத்துக்கு ஒருமுறை சென்னை வருவேன். அவ்வப்போது சினிமா பார்ப்பேன். ("காத்திருந்த கண்கள்' "வளர்ந்த கலை மறந்து விட்டாள்') அப்போது ஏஜிஸ் ஆபீசிலிருந்து இன்ஸ்பெக்ட் பண்ண இரண்டு பேர் வந்தார்கள். சென்னையிலிருந்து வந்ததால் ஒரு வித "அபிமானம்' எங்களுக்குள் ஏற்பட்டது
|
| |
"டஸ்ட் ஆன் த ரோடு'
நாடகாசிரியர்: "கென்னத் சோயர் குட்மான்'
இவர் அமெரிக்காவில் நாடகத்துக்காகத் துவங்கப்பட்ட லிட்டில் தியேட்டர் எனும் சபையைத் துவங்கிய பிரபலமான நாடக எழுத்தாளரும் இயக்குநருமாவார். 1918 இல் தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் மரணத்தைத் தழுவிய இவரது வித்தியாசமான ஓரங்க நாடகங்களுள் ஒன்றுதான் "டஸ்ட் ஆன் த ரோடு'.
குட்மானின் நினைவைப் போற்றும் வகையில், சிக்காகோ ஆர்ட்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பின்னர் "குட்மான் தியேட்டர்' உருவாக்கப்பட்டது. அதன் நுழைவு வாயிலில் குட்மானின் வார்த்தைகள் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.
""பழைய நினைவுகளைப் போற்றவும்புதியவைகளைத் தேடிக் காணவும்''
இந்த வரிகள், ஒருமுறை நாடகத்தைப் பற்றிய விளக்கமாக அவர் குறிப்பிட்டவை.
|
| |
கீத கோவிந்தம் இசைத்த ஜெயதேவர்
மேகைர் மேதுரம் அம்பரம் வந புவச்யாமாஸ்தமால த்ருமைர்
& என்று அழகிய வர்ணனையோடு தொடங்குகிறது கீதகோவிந்த காவியம். "கருமேகங்களால் வானம் மூடப்பட்டுள்ளது. தமால மரங்களின் அடர்த்தி... பச்சிலைகளால் காடுகள் மேலும் கருநிறம் பூண்டன. இரவு வந்தது' இந்தக் கவிதை வரிகளிலே உலகமே மயங்குகிறது. இதன் ஒப்பற்ற கவிதை நயம், சிறு சிறு சொற்களில் அமைந்த அற்புதச் சித்திரம். தெளிவாகத் தெரியாத இருண்ட காடு. அதன் அச்சமூட்டும் தன்மை என்று படிக்கப் படிக்க இந்த மாயாஜாலச் சொற்கள் செய்யும் விந்தையில் நம் உள்ளம் திளைக்கிறது. கீதகோவிந்தம் முழுவதுமே இப்படித் தித்திக்கும் தேனமுதம்
|
| |
சினிமாவான நாவல்: நாயின் நிழல்
ஒரு இலக்கியப் படைப்பு திரைப்படமாக வடிவெடுக்கையில் வெற்றி பெறும் வாய்ப்பு சற்றுக் குறைவுதான். காரணம், அது அதற்கென உள்ள வடிவமைப்பு, உத்தி, உள்கட்டமைப்பு என பல இருந்தாலும், இலக்கிய ஞானமும், பிரக்ஞையும் ஒருசேரப் பெற்ற ஒரு சிறந்த இயக்குனர் வசம் நாவல் ஒன்றை ஒப்படைத்தால் வெற்றி உறுதியாகும்.
|
| |
மார்கழி ஸ்பெஷல் அழகுக் கோலங்கள்
வைகறையில் துயிலெழுந்து குளிர் நன்னீராடி இல்லத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, வாசல், படிகள், முற்றம், கதவு நிலைகள், பூஜையறை, சமையல் மேடை, அடுப்பின் முக்குமிழ்கள் ஆகியவற்றில் பச்சரிசி மாவினால் கோலமிட்டு விளக்கேற்றிய பின்னரே அடுப்பெரிக்க ஆரம்பித்தாள் அன்றைய தமிழ்த் தையலாள்.
பச்சரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கி அதில் கோலமிட்டால் அது ஒரு வாரம் வரை அழியாது என்பதாலும், பச்சரிசி மாக்கோலம் எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கு இன்னமுது ஆவதாலும் பச்சரிசி மாக்கோலம் இட்டனர் முன்னோர். இன்றைய நாளில் வெள்ளைக்கல் பொடியைக் கோலமாவாகப் பயன்படுத்துகின்றனர்
|
| |
சமுதாய குணமும் - தனிநபர் குணமும்
நமது அரசு பயங்கரவாதத்தைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இது பற்றியும் ஓய்வு பெற்ற - பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
நமது அரசு - வர்த்தகத் துறை - பொருளாதார மேம்பாட்டுக்காக சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற திட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடுகிறது. எதிர்ப்பது ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள். ஆக, இந்த அரசு எது செய்தாலும் அது அரசின் நிர்வாகத்தாலேயே எதிர்க்கப்படு கிறது என்பது வாடிக்கையாகிவிட்டது. மக்கள் நலன் விரும்பும் அரசு என்பது போய் அந்நியர் நலன் விரும்பும் அரசு என்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது. யார்தான் இவர்களுக்கு கடிவாளம் போடுவது? அந்தப் பணியை நீதிமன்றம் தான் எடுத்துவருகிறது.
|
| |
மியூசிக் தெரபி என்ற ராக சிகிச்சை
சமூகத்துக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய கருத்துகளை, பல ஸாஹித்யங்கள் மூலம் இனிமையான சங்கீதத்தோடு இணைத்து பல ராகங்களில் உலகுக்கு வழங்கிய பெருமை நமது கர்னாடக சங்கீதத்துக்கு உண்டு.
நம் சங்கீதம் சாமவேதத்திலிருந்து தோன்றியது. அதற்கு முன் சங்கீதத்தை நமக்கு அளிக்கும் ஒரு நூலும் கிடையாது. ரிக்வேத சூக்தங்கள் பலவற்றைப் பொறுக்கி எடுத்து, கானம் செய்வதற்கென்றே அவற்றைத் தொகுத்து நமக்கு சங்கீதம் மூலம் வழங்குவது ஸாமவேதம். ஷட்ஜம, ரிஷப, காந்தார, மத்யம, பஞ்சம என்ற ஸ்வரங்களை ஆதாரமாகக் கொண்டு அநேக ரிக்குகளை கானம் செய்யப்படும் சாமாக்கள் பல சாம வேதத்தில் உள்ளன.
|
| |
ரத்தம் சொட்டச் சொட்ட கச்சேரி
என் தாய் வழியில் எல்லோரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாத்தா பிரபல புல்லாங்குழல் வித்வான் தஞ்சாவூர் சுப்பாராவ். பெரிய மாமா, பிரபல மிருதங்க வித்வானாக விளங்கிய டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திராவ். சின்ன மாமா டி.எஸ்.நாராயணராவ், பிரபல வயலினிஸ்ட் & சினிமா பின்னணி இசைக்குழுவிலும், பிறகு வானொலியிலும் பணிபுரிந்தவர். தாயார் நன்றாகப் பாடுவார் & வீட்டில்!
|
| |
இந்தியக் காற்று - சங்கீதக் காற்று!
இந்தியாவில் நான் காலையில் எழும்போது பறவைகளின் ஒலி எனக்கு காலை வணக்கம் சொல்லும். இனிய சங்கீதங்களுக்கு இடையேதான் நான் எழுவேன். இங்கு அமெரிக்காவில் நான் அமைதியில் எழுகிறேன். மயான அமைதி. வெறுமையைக் குறிக்கும் அமைதி. இந்தியக் காற்று முழுவதும் சங்கீதம் பரவியுள்ளது
|
|
>>More Headlines
|
|
|
|
|
|
|
 |
|