| Kalachuvadu 49 Issue |
| |
காலச்சுவடு
а
|
| |
ஜனநாயக நெருக்கடி
நாட்டில் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டுவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பெரும்போட்டியே நடப்பதுபோலத் தோன்றுகிறது.
|
| |
கொடுங்கனவின் பாரம்
""வாழ்ந்துகொண்டிருக்கும் தலைமுறையினரின் மூளையில் இதற்கு முன் செத்தொழிந்துபோன தலை முறைகள் யாவினதுமான மரபு ஒரு கொடுங்கனவாய் கனத்துக்கொண்டிருக்கிறது"" என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். அது வேறு எந்தச் சமூகத்தையும் விட இந்திய சமூகத்துக்கு மிகவும் பொருந்தக்கூடியதாகும்.
|
| |
இஸ்லாமிய அடிப்படைவாதம்: ஒரு பார்வை
தமிழக மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் பலரால் மதவாத எதிர்ப்பு என்பதும் அடிப்படைவாத மறுப்பு என்பதும் இந்து அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் சிறுபான்மையினர் அடிப்படைவாதம் என்ற பார்வையில், இந்துத்துவத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில், சாதகமானதாக, ஆதரிக்கப்பட வேண்டியதாக, குறைந்தபட்சம் மன்னித்து விட்டுவிடக் கூடியதாகக் கருதப்படுகிறது.
|
| |
மாறிவரும் தமிழ் அடையாளங்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை, பிறரைத் தெரிந்துகொள்ளுதலோ புரிந்துகொள்ளுதலோ அவசியமற்றதாகக்கூட நமக்கு இருந்திருக்கிறது. இதுவரையில் அருகருகே தீவுகளாகத்தான் இருந்திருக்கிறோம். அவர்கள் வேறு நாம் வேறு; அவர்கள் எப்படியோ அப்படியே இருக்கட்டும் என்ற சகிப்புத்தன்மையோடு வித்தியாசங்களை அணுகப் பழகியுள்ளோம்.
|
| |
வகுப்புவாதம் : ஒரு வரலாற்றுப் பார்வை
சமீபத்தில் வகுப்புவாதத்திற்கெதிரான ஒரு கூட்டத்தில், அமீன் உத்தீன் தாகரைச் சந்தித்தேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்திக்குச் சென்றிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார். பாபர் மசூதியைச் சமய சகோதரத்துவத்திற்கும் சமூக இணக்கத்திற்குமான அடையாளச் சின்னமாக அயோத்தி வாசிகள் பெருமையுடன் கருதியதை அவர் நினைவு கூர்ந்தார்.
|
| |
கோவிலின் நிழலில் பதுங்கி வளரும் மதவாதம்
சமீபகாலமாக இளைஞர்களிடையே கோயிலுக்குச் சென்று வழிபடும் பழக்கம் பெருகியிருப்பதாகச் சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டியிருந்தது. அந்தக் கட்டுரையில் கருத்துத் தெரிவித்திருந்த இளைஞர்கள் எல்லோரும் இயந்திரகதியான வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்கான மையப் புள்ளியாகப் பக்தியைக் கருதுவதாகக் கூறியிருந்தார்கள்.
|
| |
இஸ்லாமியர் பற்றிய புனைவுகள்
நிகழ்வுகளுக்கும், நிகழ்வுகள் குறித்த அறிதலுக்கும் இடையேயான "இடைவெளி" அதிகரிக்க அதிகரிக்க மனிதர்கள் புனைவுகள் வழியே இயக்கப்படுகின்றனர். நிகழ்வுகளுடன் இடைவெளி அற்ற அறிதல்தான் செயலுக்கு அடிப்படை. இந்த இடைவெளிதான் மதவெறியும், சாதியுணர்வும் செயல்படும் களம்.
|
| |
ஆளுமைச் சித்திரம்: கி. நாராயணன்
பேருந்தை நிறுத்த முயன்று அதன் திமிர்பிடித்த வேகத்தில் பின்தங்கிப்போன கையசைப்புகளையும் அதன் யந்திர மொழிக்குப் புரிபடாமல் புறக்கணிக்கப்பட்ட தொலைதூரக் கூவல்களையும் கடைசிப் படிக்கட்டின் விளிம்பில் நழுவிக்கொண்டிருக்கும் பாதங்களையும் கவனத்தில் கொள்ளாமல் நீண்டுகொண்டிருக்கிறது நம் பயணம்.
|
| |
கண்டதும் கேட்டதும்
செவ்விலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியும் நிற்பன. அந்தப் பெருங்கடலுக்குள் இறங்க அசட்டுத் துணிச்சல் பற்றாது. 224 பக்கங்களை யுடைய புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முதல் தொகுப்பு) என்னும் நூலின் முதல் ஐந்து பக்கங்களும் பேறு பெற்றவை.
|
|
>>More Headlines
|