|
| |
ஆமடா சின்னத் தம்பி! (இசைப் பாடல்)
இசைக் கவி ரமணனின் இன்னொரு பாடல் இங்கே. நாட்டு நடப்புகளை, உள் மனத்தின் ஆற்றாமைகளை, ஏக்கங்களை, நம்முடன் கவிஞர் பகிர்ந்துகொள்கிறார்; வருத்தம் தோய்ந்த இந்த வரிகள், உங்கள் செவியோரம் இதோ வலம் வருகின்றன.......
|
| |
கனடா... காணடா... - 1......தொடர்ச்சி
ஏப்ரல் 24 காலையில் 4.15 மணிக்குக் கல்கத்தாவை அடைந்தோம். எங்களை வரவேற்க சுப்ரதா சோனார் தம்பதியர் வந்திருந்தனர். இருவருமே குருஜியின் அத்யந்த பக்தர்கள்.
|
| |
கனடா... காணடா... - 1
மறுபடியும் கனடா வந்திருக்கிறேன். இந்த முறை, மனைவியோடு. தமக்கை மகளின் திருமணத்தை முன்னிட்டு வருகை. அப்பா, நிறையப் பணம் கொடுத்ததால், என் பங்குச் செலவைச் சுருக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போனது. செலவாக்கம் வேறு, செலவழித்தல் வேறு என்பார் எங்கள் தமிழாசிரியர். அதை, நினைவோடு கடைப்பிடித்து வருகிறேன்.
|
| |
வீதியில் கிடைத்த ஞானம் 6
மதுரை டவுன் ஹால் ரோட்டைப் பார்க்காதவர்களுக்கு மனித வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ரயில்வே நிலையம் இருக்கும் சாலையில் உள்ள டவுன்ஹால் என்ற அரங்கில் துவங்கி, மீனாட்சி கோவிலின் மேலக்கோபுர வாசல் வரை செல்லும் இந்தச் சந்தைச் சாலை என்பது ஆனாலும் ரொம்பத்தான் மிகை என்கிறவர்களுக்குச் சொல்லுவேன்.
|
| |
வீதியில் கிடைத்த ஞானம் - 5
கச்சேரிக்கு முத்தாய்ப்பாய்ப் பக்கத்துக் கடை 'விசாலம் காப்பி.' மதுரையில், மீனாட்சிக்கு அடுத்தபடி அதுதான் எனக்குத் திருத்தலம்! மிகப் பெரிதாய்ப் பளபளவென்று தேய்த்து வைத்திருக்கும் ஃபில்டருக்கு, விபூதி, குங்குமம் வைத்திருப்பார்கள். நான் முதலில் சிவலிங்கம்தானோ என்று எண்ணிக் கன்னத்தில் போட்டுக்கொண்டதுண்டு! அற்புதமான காப்பி!
|
| |
வீதியில் கிடைத்த ஞானம் - 4
அப்போது இந்து பத்திரிகையில் பணி புரிந்துகொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு மிகவருகே வீடு. வெற்றிலை துப்ப (புகையிலை என்று படிக்கவும்!) வெளியே வந்தால் வீட்டுக்காரி பார்த்துவிடுவாள்! இன்றும் உற்ற நண்பர்களாகத் தொடரும் சக ஊழியர்கள், ஜன்னல் வழியே சைகையிலேயே சமையல் என்ன என்பதைக் கேட்டுக்கொண்டு விடுவார்கள். அலுவலகத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை அள்ளிக்கொண்டு வந்து விடுவார்கள்! அருகாமை, அணுக்கம் இரண்டும் சேர்ந்தே இருந்தன எங்கள் மதுரை வாழ்க்கையில்.
|
| |
ராம ராஜ்ஜியம் வருகவே! - இசைப் பாடல்
வானின்று புதியவண்ணம் சூடிக் கொண்டது!
வார்த்தைக்குள் சத்தியமே பூத்து நின்றது!
வாசலில் வசந்த ராகம் வந்து நின்றது!
வாழ்க்கையின்று வாழ்வுபெற்று வாழ்த்துகின்றது!
ராம ராஜ்ஜியம் வருகவே! எங்கள்
தேசம் நிம்மதி பெறுகவே!
|
| |
வீதியில் கிடைத்த ஞானம் - 3
மதுரையில், ராஜா முத்தையா மன்றத்திற்கு அருகே கற்பகம் உணவு விடுதி ஒன்றிருந்தது. அதுதான் எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரே ஓட்டல் என்பதால் நாங்கள் கற்பகமே கதியாகக் கிடந்தோம். சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது; சிற்றுண்டி இன்னும் நன்றாக இருந்தது.
|
| |
வாழெயிலே - இசைப் பாடல்
வாழெயிலே பந்தலுதான்! - அம்மாடி
வாய்செவக்க வெத்தலதான்!
தாழெயிலே பூமுடிச்சி தங்கத்திலே வளையடுக்கித்
தள்ளாடி நடந்து வராளாம்! - தங்கச்சி
தன் நெனப்பே மறந்து வராளாம்!
|
| |
வீதியில் கிடைத்த ஞானம் - 2
மதுரைப் பேருந்து நிலையம். அப்போது மாட்டுத் தாவணிக்கு மாறவில்லை. (ஓ! விளக்கவில்லையென்றால் விபரீதமாகிவிடும். மா.தா. என்பது மேலூர்ச் சாலையில் உள்ள ஓர் இடம். மற்றபடி, விசித்திரங்கள் நிறைந்த மதுரையில் கூட மாடு, தாவணி எல்லாம் போட்டுக்கொள்ளாது. எங்கேயும் எதைப் போடுமோ அதைத்தான் இங்கேயும் போடும்! :-)).
|
|
>>More Headlines
|