| Azhakiyperiyavan |
| |
ஈப்புகுந்தால் இறகொடியும் காடு
தொட்டிச்செடிகள் வாடியிருக்கிறபோது அதற்கு நீர் ஊற்றி பார்த்துக்கொண்டிருக்க வேண்டும், அப்போது ஒரு அற்புதம் நிகழும், கண்ணெதிரிலே அந்த அற்புதம் நிகழ்வதை பார்க்க மனம் பெருமகிழ்ச்சி கொண்டுவிடும்.
|
| |
பொம்மை விற்கும் குழந்தை
இந்தியாவின் உண்மையான முகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் கிராமங்களுக்கு போங்கள். அங்கே மிகவும் பிரதானமாக துருத்திக்கொண்டு தெரிவது சாதியப் பாகுபாடு. நீரும் எண்ணெயும் ஒன்றாக இருந்தாலும் கலவாமலேயே இருப்பது போலத்தான் மக்கள் கூட்டம் கிராமங்களில் இயங்குகிறது.
|
| |
பொதுச் சமூகத்தின் மனத்தில் ஒரு கீறல்
கவர்மெண்ட் பிராமணன், ஊரும் சேரியும், உபாரா, உச்சாலியா போன்ற தலித் சுயசரிதைகளை மொழிபெயர்ப்பின் வழியே படித்த போதெல்லாம் தமிழில் இப்படியான சுயசரிதை நூல்கள் இல்லையே என்று ஓர் ஆதங்கம் மனத்தில் கவியும்.
|
| |
கோழி வளர்த்த கதை
கோழி முட்டைகளை எடுக்க எங்களுக்குள் போட்டியே நடந்தது. கோழிகள் இட்டவுடன் சூடாக இருக்கும் முட்டைகளை எடுக்க ஆசை ஆசையாய் இருக்கும். முட்டை தோசையும், அவித்த முட்டையும் அவ்வப்போது கிடைத்தன. அடைகாக்கும்போதுதான் இப்படி எதுவும் தின்னக் கிடைப்பதில்லை. உள் வீட்டில், மணல் கூடையில், முட்டைகள் மீது உட்கார்ந்திருக்கும் கோழியைப் பார்க்க அம்மா மட்டும்தான் போவார். எங்களையெல்லாம் பார்த்தால் கொத்த வருவது போல சீறும் அடைக்கோழி!
|
| |
மஞ்சள் வெயில் காயுதாம்
என் பாட்டீ குழந்தையம்மாள் இறந்த போது நான் மிகவும் துக்கித்தேன். அவர்கள் ஒரு அற்புதம் என்று எப்போதோநான் எழுதிய கவிதை, அவர்களைப் பற்றிய நிலையான சித்திரமாய் மனதில் இப்போதும் நிழலாடுகிறது.
|
| |
ஒப்பனை ஏதுமின்றி
எங்கள் ஊரில் சிலுக்குத்தாத்தா என்று ஒருவர் இருந்தார். சிலுக்குத்தாத்தா என்பது அவரின் சொந்த பெயர் அல்ல. பட்டப் பெயர். சிலுக்குசுமிதா நடித்த(!) படம் என்றால் அவருக்கு வெல்லம் சாப்பிடுவது மாதிரி. மழை வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, தன்னுடைய பழைய குடையை கையில் மடித்துப் பிடித்தபடி படம் தொடங்குவதற்கு முன்பே டெண்ட் கொட்டகைக்குப் போய்விடுவார். தரை டிக்கட்தான் வசதி. திரைக்கு வெகு அருகில் மணலை குவித்து உட்கார்ந்துக்கொண்டால், பசங்கள் பின்னாலிருந்து திட்டினாலும் எழுதுவதில்லை. சிலுக்கு ஆடும்போது அவர் வாய் மூடாது.
|
| |
சமூகம், இலக்கியம், அறவுணர்வு
சமீபத்திலே ஒரு நேர்காணலுக்காகப் போயிருந்தேன். அது நான்காயிரம் சம்பளத்திற்கு, தற்காலிகமானதொருவேலை. தனியார்த் துறையிலல்ல. அரசுத் துறையில்தான். தேவைப்பட்ட கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு.
|
| |
புரட்சிகர கவிதைகள்
படிக்கும் காலம் தொட்டே புரட்சிகர கவிதைகள் மீது ஈடுபாடு இருந்தது. அக்கவிதைகளில்இருக்கும் அதிர்வுமிக எளிதாக தொற்றிக்கொள்கிற ஒன்றாகும். வறுமை, பசி,தீண்டாமைக்கொடுமைகள், வன்முறை போன்றவைகளுக்கு எதிராக அக் கவிதைகள் எழுப்பும்கேள்விகள் தர்க்கமும் நியாயமும் கொண்டவை, இச்சமூகத்தின் எற்றத் தாழ்வுகள் மீது கோபம்கொண்டிருக்கிற ஒரு மனிதனின் மனத்தை மிக எளிதாக இக்கவிதைகள் தம்பால்ஈர்த்துக்கொள்ளும்.
|
| |
கம்பளிப்பூச்சி இரவு
நூல் வெளியீட்டு விழாக்கள் வித்தியாசமாக நடக்கின்றன. இதற்கென மூளையைக்கசக்கிக்கொண்டு திரிகிறவர்கள் இருக்கிறார்கள். தன் நூலை பரவலான கவனத்துக்குக் கொண்டுபோவது என்ற எண்ணம் சிலநேரங்களில் இந்த வித்தியாசத்திற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. வெகுசில நேரங்களிலோ நூலாசிரியரின், வெளியிடும் குழாமின் சித்தாந்தஅடிப்படையிலும் அமைந்துவிடுகிறது
|
| |
பயணம்
கண்மணியின் சமீபத்திய தொகுப்பான வெள்ளெருக்கு, அவரின் வழமையான கதைகளைக் கொண்டது. இதில் பயணம் குறித்த ஒரு கதை இருக்கிறது. இது வேறுவகையான பயணம். அந்தப்பக்கம் நேரத்துக்கு என்று வரும் பேருந்தில் பிள்ளை பேற்றுக்காக வேண்டிநிறைமாத கர்ப்பிணி, வலியோடு மருத்துவமனைக்குப் பயணம் செய்வது.
|
|
>>More Headlines
|