| Amudhasurabi |
| |
அக்டோபர் 2004 இதழைப் பற்றிய கடிதங்கள்
"அமுதசுரபி' மாத இதழில் பக்கப் பற்றாக்குறை காரணமாக வெகுசில கடிதங்களை மட்டுமே வெளியிட முடிகிறது. வாசகர்கள் பலர் தமது கருத்துகளை வெளியிட வேண்டும் என்றும் படைப்பாளர்கள் பலர் தமது படைப்புக்கான எதிர்வினைகளை அறியவேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இதழ் குறித்து வந்த கடிதங்கள் பெரும்பாலானவற்றை இங்கு தருகிறோம்.
|
| |
கவிதாயினி வத்ஸலா
கலைநயம் என்பது என்ன? செய்தியைப் போன்று நேரடியாக அது பேசக்கூடாது. நமது மனத்தைச் சுண்டி இழுக்கும் தன்மை அதற்கு இருக்க வேண்டும். ஒரு புதிய கோணத்திலிருந்து அது வெளிப்பட வேண்டும். உடனடிப் பயன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னை நுகர்வோரிடம் அது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
|
| |
சொல்லப்படுகிறது கொஞ்சம், நம்பப்படுகிறது கொஞ்சம்
நான் வெ.சாவுக்கு எழுதும் இப்பதிலில் மிக முக்கியமான பகுதியென நான் கருதுவது, மேலே எழுதியுள்ள என் கருத்துகளைத்தான். இதற்கு மேல் என்னை விமர்சிக்கும் சில கீற்றுகளையும் அவர் தன் கட்டுரையில் உதிர்த்துக்கொண்டு போவதால் அவற்றில் சிலவற்றையேனும் நான் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
|
| |
காற்றினிலே வந்த கீதங்கள்
ஆவணமோ, காற்றினிலே வரும் கீதங்களோ, அவற்றின் உண்மைச் சூழல்களால் அனுபவத்தால், பரிமாறிக்கொள்ளும் மனிதர்களின் குணங்களால் உணரப்படும். பொய்யும் ஆவணங்களால் நிரூபணம் ஆகும். ஆகின்றன.
|
| |
என் மூளை பற்றிச் சில தகவல்கள்.
அமுதசுரபி அக்டோபர் இதழில், "நினைவகலாத நினைவோடை' என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும் வெங்கடாசலத்தின் கட்டுரையை இணையத்தில் அமுதசுரபி இதழில் படித்தேன். அவர் எழுதும் முயற்சியை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தது. சமீப காலமாக அவரைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் அவருக்கு ஏற்கெனவே இருந்த இலக்கிய உணர்வுகள் கூர்மைப்பட்டு வருவதுபோல் தோன்றியது. வாசிப்பார்வம் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது.
|
| |
"திட்டமிட்டு', "உள்நோக்கங்கள்' என்கிற வார்த்தைப் பிரயோகங்கள் வரவில்லை
நான் மதிக்கும் ஆகப் பெரிய தமிழ் எழுத்தாளர், சு.ரா. எழுத்தாளராகவும் ஒரு மனிதராகவும் அவர் என் மனத்தில் ஓர் உன்னதமான உயர்ந்த ஸ்தானத்தில் நிலை கொண்டிருக்கிறார். நான் ஒரு சாதாரண ஆள். இன்றும்கூட அன்றைக்குச் சு.ரா. பார்த்திருந்த அதே சிறுவன் தான்.
|
| |
ராசாக்குட்டி
""பாருங்களேன், எத்தனை அழகு... குழந்தை மாதிரி மிருதுவா இருக்கு'' என்று அதை அணைத்துக்கொண்ட ஜெயா, கண்களில் 100 வாட் பல்ப் ஒளியுடன் "முதல் முதலா நம்ம வீட்டு வாசலுக்கே வந்திருக்கு... நாமளே வெச்சுக்கலாமா?' என்றாள்.
|
| |
மற்றொரு சிற்றலை
"வல்லமை பொதிந்த கருத்து, உலகுகளை ஈன்றது. எனின் உவகையே, ஆனந்தமே அக்கருத்தினை ஈன்றது. அனந்தப் பிரம்மன் தன்னுள் அளப்பரிய ஆனந்தத் தினைக் கருக் கொண்டுள்ளான். அதனாலேயே உலகுகளும் பிரபஞ்சங்களும் பிறந்தன.
|
| |
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
நான் வங்கி வைப்பு நிதியில் போட்டிருந்த வைப்புநிதி நேற்றுத்தான் முடிவடைந்தது. அதைப் புதுப்பிக்கப் போனால் 11 சதவீதம் வட்டி வாங்கிய அந்த வைப்பு நிதிக்கு இப்பொழுது வட்டி 6.25% என்கின்றனர். அதனால் அதை என் சேமிப்புக் கணக்கில் சேர்த்து விட்டு எதில் போடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்
|
| |
புதுவையின் பாரம்பரிய கட்டங்கள்
கவி சுப்பிரமண்ய பாரதி, பத்து ஆண்டுகள் (1908-1918) புதுச்சேரியில் வாழ்ந்தார். அவர் வசித்த வீடு, ஈசுவரன் தர்ம ராஜா கோவில் தெருவில் உள்ளது. இவ்வீடு, பாரம்பரிய கட்டடம் என அறிவிக்கப் பட்டுள்ளது. பிரெஞ்சு, இத்தாலிய, புதுச்சேரி நகர மன்றங்கள் இணைந்து மற்றும் பல கட்டடங்களையும் பாரம்பரிய கட்டடங்கள்
|
|
>>More Headlines
|