|
| |
ஆகஸ்டு மாதப் பலன்
காரிய அனுகூலத்தைக் கண்டு, பணப் புழக்கத்தையும் பெறலாம். எதிரிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் வரும். பொருளாதார வளம் மேம்படும். தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுமூக நிலை நீடிக்கும்.
|
| |
அமிர்தம் சூர்யா கவிதைகள்
திடீரெனப் புறப்பட்ட செவ்வெறும்புப் படையெடுப்பை ஒழிக்க மண்ணெண்ணெய் தேடும் எனை அதட்டி ஒரு சிட்டிகை சர்க்கரையை சுவர் விளிம்பில் அப்பா தூவ, வாயில் கவ்வியபடி தம் வசிப்பிடம் ஓடி மறைய வெறுமையானது- புற்றின் வெளியிருந்த எங்கள் சின்ன அறை
|
| |
பாரதியும் இரவீந்திரரும்
இரவீந்திரர், இங்கிலாந்து சென்ற போது தம் கவிதைகளில் சிலவற்றைக் கீதாஞ்சலி என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பெயர்த்துத் தம்முடன் எடுத்துச் சென்றார். அவருடைய கவிதைகளின் இலக்கியச் சிறப்பை விட அவற்றில் இடம் பெற்றிருந்த, கீழைநாட்டுச் சிந்தனையில் தோய்ந்த மத, ஆன்மீக, தத்துவக் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். இக்கருத்துகள், மேலைநாட்டாருக்கு முற்றிலும் புதுமையானவை. அவர்களது பார்வைக்கு இரவீந்திரர் உலகுக்கு ஒரு புதிய செய்தியைச் சொல்லும் ஆன்மீகவாதியாகத் தோன்றினார்.
|
| |
நூல் விமர்சனம் : கண்டெடுத்த கருவூலம்
வசன சம்பிரதாயக் கதை எப்படிப்பட்ட நடையைக் கொண்டிருந்தாலும் -அளகாபுரி குபேரன், நவக்கிரகங்கள் என்றெல்லாம் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இக்கதையின் மண்வாசனை வெளிப்படையாகவே உள்ளது. வேறு எந்த வகையிலும் வசன சம்பிரதாயக் கதையை விமர்சனத்திற்குட்படுத்துவது தகாது. அது கையில் கிடைத்துத் திரும்பவும் பதிப்பிக்கப்பெற்றது, போற்றப்படவேண்டிய காரியம்.
|
| |
நூல் நயம்
சிறுவர்களுக்குப் பாடல் புனைவது என்பது மிகவும் சிரமமான வேலை. முதலில் சிறுவர்களுக்கு எதைச் சொல்லவேண்டும், சொன்னால் புரியாது, தெரியாது என்பது ஒரு கவிஞருக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதன்பின், அவர்களின் மொழி அறிவு, தகவல் ஞானம் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கும் மேல் முக்கியமானது, சந்தம். சிறுவர்களைக் கட்டிப்போடுவது, இந்தச் சந்தமே.
|
| |
காலை உலா
கைத்தடியை எடுக்கிறார். மாடிப் படியில் வலது காலை முன் வைத்து இறங்குகிறார். அவரது நம்பிக்கை - பகலில் வலது காலை முன் வைத்தால் விபத்து ஏற்படாது. காலையில் தூங்கி எழும் போதும் வலது பக்கமாக ஒருக்களித்து எழுந்து உட்காருவார். இடக் கண் துடித்தால் பிள்ளை ஞாபகம் வரும். ஆண்டுக்கணக்காய் வெளிநாட்டில் வசிக்கிற மகன்.
|
| |
சென்னை வந்த சதீஷ் ஆலேகர்
மற்றவர் மனத்திலிருப்பதை அறிய வேண்டும் என்று வரம் வாங்கி, பின் அதன் விளைவு தெரியத் தொடங்கியதும், இந்த வரத்தின் பலனோடு வாழ முடியாது என்று தெரிகிறது. ""வேண்டாம் அந்த வரம்'' என்று அலறத் தோன்றுகிறது. நம் தலைமைகள் பற்றி, அவர்கள் பிரச்சாரத்தை நம்பி வாழ்வதே நிம்மதி தரும்.
|
| |
சிறு பத்திரிகைக்காரர்கள் என்ன பைத்தியக்காரர்களா?
வெகுஜன இதழ்களில் தீவிர சிந்தனை பரிவர்த்தனையும், பரிசோதனை முயற்சிகளும், புதிய அறிமுகங்களும் மறுக்கப்படும் போது, கலைஞர்கள் தன்னளவிலான புதுப் புதுத் தளங்களைத் தாங்களே கட்டமைத்துக்கொள்வதென்பது தவிர்க்க இயலாததாகிறது.
|
| |
அணிகலன்களும் உடல்நலமும்
அணிகலன்கள், அழகுக்கு அழகு சேர்ப்பதுடன் மட்டுமின்றி உடலின் உள் உறுப்புகளை, மிக மென்மையாக ""ஊசி அழுத்த முறையில்'' செயலாற்றிப் பாதுகாத்து, உடல்நலத்தைச் சீருடன் வைத்திருப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன என்பது விந்தையிலும் விந்தைதான்.
|
| |
தமிழர் வாழ்வில் அணிகலன்
தமிழர்கள் அழகியலின் அடிப்படைக் கூறுகளை நாம் இன்று வரை சரியாக ஆராயவில்லை. தமிழர்களின் சிற்பக் கலையும் கட்டடக்கலையும் உலகத்திற்கு நம் பெருமையைக் கூறிக் கொண்டிருப்பது போல அணிகலன் மரபும் நம் பெருமையைப் பறைசாற்றுகிறது.
|
|
>>More Headlines
|