Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> aug07
Exclusive : Amudhasurabhi August 07 Edition
•   செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்
சிறு வயதிலிருந்தே வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற தன்னம்பிக்கையும், செஸ் விளையாட்டின் மேல் அதிக ஆர்வமும், நல்ல நினைவாற்றலும் உண்டு. இப்போது கூட அவனுக்கு 1986ல் விளையாடிய ஆட்டங்களின் ஒவ்வொரு மூவும் நினைவிருக்கும். இவைகள்தான் அவன் வெற்றிக்குத் துணை.

•   சிறப்புச் சிறுகதை-அடையாளச் சிக்கல்
கப்பன் ரோடின் வளைவில் திரும்பி இடது பக்கம் ஓடும் நடை பாதையில் நடக்க அவனுக்குப் பிடிக்கும். எல்லாச் சாலைகளிலும் இரு பக்கமும் நெடிதுயர்ந்த மரங்களின் வரிசை என்றால், இங்கு நடுவில் ஓடிய சாலை பிரிப்பானிலும் ஒரு வரிசை பூத்துக் குலுங்கும்.
•   உலக தாய்ப்பால் வாரம்: ஆகஷ்ட் 1 முதல் ஏழு வரை...
இந்தியா இந்த ஆண்டில் 16வது உலக தாய்ப்பால் வாரத்தை அனுசரிக்க உள்ளது.
தாய்ப்பாலில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துப் பொருட்களும் சரியான விகிதத்தில் உள்ளன.
•   காலத்தை வென்ற கட்டுரை : ஆகஸ்ட் 30
ராமனும் மேதாவி; கிருஷ்ணனும் மேதாவி. புராண ராமனையும் கிருஷ்ணனையும் பற்றி நான் சொல்லவில்லை, பூலோகத்தில், தற்காலத்தில் உலகப் புகழோடு வாழும் ஸர்.ஸி.வி. ராமனையும், எப்பொழுது பேசப் போகிறார் என்று நூற்றுக்கணக்கானவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் என்.எஸ். கிருஷ்ணனையும் பற்றித்தான் நான் பேசுகிறேன்.
•   அம்மா...நீ வெறும் பெண்ணல்ல...
"இழைக்கும் வினைவழியே அடும்காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமனைக் கோமளமே!
உழைக்கும்பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே"
•   திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
ரூ 50 முதல்பரிசு பெறும் கேள்வி கோடி கொடுத்தாலும் எந்நிலையிலும் பிறழாமல் இளைஞர்கள் விடாப்பிடியாகப் பற்றி நிற்க வேண்டிய கொள்கை எது?
கோவி. திரிபுரசுந்தரி, சென்னை- 34.
வரதட்சிணை மறுப்பு. பெண் வீட்டார் கோடி கொடுத்தால் வாங்கி இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். ஆனால் கோடி அல்ல, சில ஆயிரங் களைக் கூட மாப்பிள்ளை வரதட்சிணையாக வாங்கக் கூடாது. திருமணத்தை எளிமையாக நடத்துவதும் திருமணச் செலவை இருவீட்டாரும் பகிர்ந்துகொள்வதும் நடைமுறை ஆகவேண்டும்.

ரூ.25 இரண்டாம் பரிசுபெறும் கேள்வி.
கே.மக்களிடம் ஆங்கில மோகம் அதிகரித்து வருகிறதே?
க.சு.மணியன், பெரணமல்லூர்.
தாய்மொழிப் பற்றை மறந்த ஆங்கில மோகம் தவறு. ஆனால் ஆங்கில அறிவு தவறல்ல. தேவையானது.

உங்களை அதிகம் கவர்ந்த சுதந்திரத் தியாகி?
எம். கோவிந்தன், கும்பகோணம்.
திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள். கொடியிலிருந்து தற்காலிகமாக உதிரும் மலர்கள் அவர் கூந்தலிலிருந்து நிரந்தரமாக உதிர்ந்தவை. கொடியின் காவி வண்ணம், அவரது குங்குமத்திலிருந்து எடுத்தது. கொடியில் காணும் பசுமை அவர் வாழ்வில் இருக்கவில்லை. கொடி நடுவே இருந்த வெள்ளை நிறத்திலிருந்து தான் அவர் தன் சேலைக்கு நிறம் பெற்றார். கொடியின் சக்கரம் உருள்வதில்லை. ஆனால் ராமாயி அம்மாளின் வாழ்க்கைச் சக்கரம் உருண்டது. அப்படியே 90 வயது வாழ்ந்து மறைந்த சரிதம் அவருடையது. குமரி ஆகும் முன்பே கைம்பெண் ஆனவர் குமரன் மனைவி. திலகமில்லாமல் கணவர் நினைவே துணையாக வாழ்ந்த மங்கையர் குல திலகம். தியாகிகளில் அவரைவிட மங்கலமானவர் யாருமில்லை.

"அவனோ அல்லது அவளோ'... என்று எழுதுவது சரியா?
அ.மல்லிகை, கோவை.
சரியல்ல. அவன் அல்லது அவள் என்று எழுதலாம். இல்லாவிட்டால் அவனோ அவளோ என்று எழுதலாம். Kகாரமே ஐயப்பாட்டுப் பொருளைத் தரும்போது அதையும் எழுதி அதோடு அல்லது என்ற சொல்லையும் எழுதுவது தேவையற்றது. பிழையானது.

•   தேவை முரண்பாடில்லாத மனிதர்கள்!
அறுபதாம் சுதந்திர தினம் கொண்டாடப்படும் தருணம் இது. தட்டில் வைத்து சுதந்திரத்தை இந்தாருங்கள் என்று யாரும் கொடுத்து விடவில்லை. எத்தனையோ தியாகிகள் கடுமையாய் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் கனவு கண்ட சுதந்திரம் இதுதானா?
•   டீம் யூபியோவின் நலன் தரும் பொருட்கள் - 2
டீம் எனர்ஜி ஹெர்பல் வாட்டர், ஆலோ வேரா, டீம் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பற்றி சென்ற இதழில் விலாவாரியாக எழுதியிருந்ததைப் படிக்காதவர்கள், அதைத் தேடிப் படித்த பிறகு இந்தப் பக்கம் வாருங்கள்!

"நோனா' உப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் சோடியம் கிடையாது; அவசியமான தாதுப் பொருட்களான கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பொட்டாசியம் எல்லாம் இருக்கின்றன. டீம் ஹாஃப் ஸால்ட்டில் (அதான் அரை உப்பு), சாதாரணமாக இருக்க வேண்டிய சோடியம் அளவைவிடக் குறைச்சலாக இருக்கும். அதனால என்ன பயன்னு கேட்கறீங்களா? இரத்த அழுத்தம் சீராக இருக்குமே!

தேன் குடித்திருப்பீர்கள். காஜ்மீரில் உள்ள இமாலய மூலிகை மலர்களிலிருந்து எடுத்த தேனைப் பருகி இருக்கிறீர்களா? ஆயுர்வேத அறிவியலும், நவீன தொழில்நுட்பமும் கைகோத்துக் கொண்டு "காஜ்மீர் ஹனி'யை நமக்குத் தந்திருக்கின்றன. மஞ்சள், துளசி, அம்லா, வேம்பு, அசுவகந்தா - அத்தனையும் இதில் இயற்கையாகக் கலந்துகொண்டிருக்கின்றன.

"ஆலோ வேரா' தலைமுடி வளர்ச்சிக்கும், தலையிலிருந்து முடி கொட்டாமல் தடுக்கவும் உதவுகிறது. சருமத்தைப் பாதுகாக்கிறது. வயதானாலும், அதிகம் சுருக்கம் விழாது! வயிற்றிலோ வேறெங்காவதோ தழும்புகள் இருந்தால்கூடப் போய்விடும். "ஆலோ வேரா' பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். மேற்கத்திய காஷ்மெட்டிக் (ஒப்பனை) சாதனங்களில் மெழுகுதான் 25% மீதி 75% நீர். வெப்பத்தைச் செலுத்தித்தான் லோஷன் தயாரிக்க முடியும். ஆலோ வோராவில் வெப்பம் உபயோகப்படுத்துவதே இல்லை. ஆலோ வேரா தயாரிப்புகள் எல்லாம் ஜெல் ஆதாரமாகக் கொண்டு உண்டாக்கப்படுவதால் மெழுகே தேவைப்படுவதில்லை. இதன் காரணமாக சருமத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை!

பனை வெல்லம் இனிக்கும் என்று மட்டும்தானே தெரியும்? இதில் தாது உப்புக்கள் இருக்கின்றன என்று தெரியுமா? இந்தப் பனை வெல்லக் கரைசலை டைபாய்டு தாக்கும்போது மட்டுமல்ல, தீவிரமாக வாட்டும்போதும் பருகக் கொடுப்பார்கள். பனைவெல்லம் மட்டுமல்ல, மிட்டாய், டாஃபி என்று டீம் நிறைய வகைகளை உருவாக்கியிருக்கிறது.

கரும்பு சர்க்கரைக்கும் பனஞ் சர்க்கரைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. கரும்புச் சர்க்கரையில் தாது உப்புக் கிடையாது, பெரிய சத்து ஏதும் கிடையாது, நோய்களுக்கு எதிராகப் போரிடாது. சில சமயம் பாதகமான விளைவுகளைக் கூட உண்டாக்கிவிடும். பனஞ் சர்க்கரை இனிப்பாக இருப்பதோடு, இதில் தயாமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், புரதம், வைட்டமின் "சி' எல்லாம் இருக்கின்றன. ஆஷ்துமா, அனீமியா, ஜலதோஷம்- இருமலுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது! இப்ப சொல்லுங்க, கரும்புச் சர்க்கரை பனஞ் சர்க்கரை கிட்டே நிக்க முடியுமா?

நிர்வாக அலுவலகம் : வண்டலூர்: டீம் ஹவுஷ், ஜி.எஷ்.டி. ரோடு, சென்னை-48. போன்: 044 - 2275 0502

கிளை
புரசைவாக்கம்: 23, ஆஹள்ங்ம்ங்ய்ற், பிரின்ஷ் டவர்ஷ், 94, புரசைவாக்கம் சாலை, அபிராமி திரையரங்கு எதிரில் போன்: 4542 8898 *************** * டீம் தயாரிப்புக்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவை பற்றி அடுத்துவரும் இதழ்களில் பார்ப்போம்.
•   யாதும் ஊரே....பெங்களூரு எங்க ஊரு!
கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பெங்களூர். Kய்வு பெறுபவர்களின் சொர்க்கம் (டங்ய்ள்ண்ர்ய்ங்ழ்'ள் ல்ழ்ஹக்ண்ள்ங்) என வர்ணிக்கப்படும் இந்தியாவின் பெரிய நகர வரிசையில் 5-ம் இடத்தைப் பிடித்துள்ள பெங்களூர் எங்கும் குளுமை, பல மொழி உரையாடல் ஒலிகளின் இனிமையால் சூழ்ந்துள்ளது பெங்களூர். பசுமை நகரம் (எழ்ங்ங்ய் ஸ்ரீண்ற்ஹ்), பூங்காநகரம், குளுகுளு நகரம், தொழில்நுட்ப நகரம் (சிலிக்கான்வேலி) என்று பன்முகப்புகழ் கொண்டுள்ள நகரமிது.

கெம்பே கௌடாவால் நான்கு அரண்களுடன் நிறுவப்பட்ட இந்நகரம் கால Kட்டத்தில் அரண்களைத் தன்னுள்ளே அடக்கி எல்லைகளை விரித்துக் கொண்டுள்ளது. பிரதேச மொழியான கன்னடத்துடன் தேமதுரத் தமிழின் Kசை நிறையவே இங்கு ஒலிக்கிறது. மற்றும் இங்கு பேசப்படும் மொழிகள் துளு, ஹிந்தி, கொங்கணி ஆகியவை. Kங்கி உயர்ந்த ஆலயங்கள், மசூதிகள், சர்ச்சுகள், ஜைன கோவில்கள் நகரை அழகு படுத்துகின்றன.

அல்சூரில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸோமேஷ்வர ஆலயம், சோழ காலத்தில் கட்டப்பட்டுள்ளதெனினும், அழகிய அதன் ராஜகோபுரத்தையும், மதில் சுவர்களையும் கட்டிய பெருமை கெம்பேகௌடாவையே சாரும். அல்சூரில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றும் 2 அம்சங்கள் உண்டு. ஒன்றரை (1 1/2) சதுர கிலோ பரப்பளவு கொண்ட அல்சூர் ஏரியின் படகு சவாரி ஒன்று. மற்றொன்று ஏரியின் எதிரே அமைந்துள்ள தமிழ்ச்சங்கம். எப்பொழுதும் Kயாது Kங்கிக் குரல் கொடுத்து வருகிறது தமிழர்களின் நலனுக்குப் பாடுபடும் இச்சங்கம். தவிர தமிழ்த்தொண்டு புரிவோர் மற்றும் சிறப்புகள் கொண்டோ ரை வருந்தி அழைத்து வலுவில் கௌரவித்துப் பெருமை கொடுத்துப் பெருமை சேர்த்துக் கொள்கிறது இச்சங்கம். இதன் தற்போதைய தலைவர் சண்முகசுந்தரத்தின் அயராத தொண்டு போற்றத்தக்கது.

திராவிடக் கலைக்குச் சான்றாக 1951-1956 ல் மைசூர் மாநில முதல் மந்திரியாக இருந்த கெங்கல் ஹனுமந்தையாவால் உருவாக்கப்பட்ட விதான் சௌதா, பூங்கா நகரத்தில் முத்திரை பதித்துள்ள கட்டிடமாகும். 13.7.1951-ல் ஜவஹர்லால் நேருவால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1000 பணியாட்கள் கட்டிடம் கட்ட அமர்த்தப்பட்டனர். இதற்கான செலவு 1 கோடியே 84 லட்சம். 1989ம் ஆண்டு நிறுவப்பட்ட வட்டவடிவிலான ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தின் விசால வெண்திரையில் வானத்தில் நிகழும் அதிசயங்கள், விண்வெளி தகவல்களின் திரைப்படம் காட்டப்படுகிறது.

பெங்களூர் விமான நிலையச் சாலையில் அமைந்துள்ள 'கெம்போர்ட்' (Kங்ம்-ஊர்ழ்ற்) என்னும் சிறப்பு அங்காடியின் பின்புறம் 65 அடி உயர பிரம்மாண்ட (தாமரை மீது அமர்ந்துள்ள) சிவன் சிலை உள்ளது. சிலையின் பின்னே கைலாஸ மலையின் அமைப்பும், சலசலவென Kடிவரும் கங்கை நதியின் அமைப்பும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

•   அன்னை தெரசா பிறந்த நாள்: ஆகஷ்ட் 26...பெண்குலத் திலகம் அன்னை
அநேக மேல் நாட்டுப் பெண்கள் இந்தியா வந்து நம் கலாசாரத்தில் இரண்டறக் கலந்து ஆன்மிக, சமூகப் பணியிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். அவர்களில் அன்னை தெரசா உலக நாடுகளில் நம் நாட்டின் மேன்மையைக் கொடிகட்டிப் பறக்கச் செய்தவர். அவர் பிறந்தநாள் ஆகஷ்டு 26. (26.08.1910). ஆனால் அவர் சபைச் சகோதரிகள் செப்டம்பர் 10-ந் தேதி உலக ழுமுவதும் பிறந்த நாள் பெருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

"கம்யூனிஸ யூகோஷ்லா வியாவைச் சேர்ந்த அல்பேனிய நாட்டிலுள்ள செகாப்ஜி கிராமத்தில் மத்திய தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். என் அக்கா தெரசா 1910-ல் பிறந்தார். அவரது ஆரம்பப் பெயர் ஆக்னஷ் கான்க்ஸா பெஜாக்ஷ் கியு. எங்களோடு பிறந்தவர்கள் ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும். சிறுவயதிலேயே அக்கா ஏழைகளிடம் இரக்கமாக நடந்து கொள்வார். அழைத்து வந்து உணவு அளிப்பார். பழைய ஆடை கொடுப்பார். கடவுள் பக்தி அதிகம்..

இவரது 18ம் வயதில் பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்தது. கல்கத்தா லொரெட்டோ கன்னியர் மடத்தில் தெய்வப் பணிபுரிய பெண்கள் தேவை என்று! அக்கா சேரத் துணிந்து பெற்றோர் அனுமதி பெற்று, கல்கத்தா புறப்பட்டார். 1928-ல் சொந்த நாட்டிலிருந்து இந்தியா வந்தவர், இந்தியப் பெண்ணாகவே மாறிவிட்டார். பிறகு பிறந்த மண்ணை மிதிக்கவே இல்லை.

>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us