| Amudhasurabi |
| |
முடிவல்ல; ஆரம்பம்
உடனே தரகர், "ஆனா மாமி, அந்த மாம்பலத்து வரன்தான் 9 பொருத்தங்களும் உள்ளது. சர்மா சாருக்கும் அதுதான் பிடிக்கிறது. பையன் பெயர் ராஜாராமன். பையன் செத்தெ கருப்புதான். அவாத்திலே யாருமே நல்ல நிறமில்லே. ஆனா ஆம்பிளைக்கு நிறமும் அழகும் என்ன வேண்டி யிருக்கு? உங்க குடும்பம் மாதிரியே பெரிய குடும்பம்தான். பையன் எம்.ஏ. படிச்சிருக்கான். தனியார் கம்பெனியிலே வேலை. கை நிறைய சம்பளம். கொஞ்சம் கர்நாடகமான மனுஷாள். அதொண்ணும் பெரிய விஷயமில்லே. நாம்ப "அட்ஜஸ்ட்' பண்ணிக்கலாம்' என்று முடித்தார்.
|
| |
கார்ட்டூன் புலிகள்
லண்டனின் "பஞ்ச்' ('டன்ய்ஸ்ரீட்') பத்திரிகைதான் முதன்முதலில் காரி கேச்சரிலிருந்து "கார்ட்டூன்' என்ற பெயர் மாற்றத்தைத் தன் கேலிச் சித்திரங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறது -அதுவும் 1843யிலேயே. அன்றைய தேதியில், லண்டனில் புதிதாக நிர்மா ணிக்கப்பட்டிருந்த "பாலஸ் ஆஃப் வெஸ்ட்மின்ஸ்டர்' (டஹப்ஹஸ்ரீங் ர்ச் ரங்ள்ற் ம்ண்ய்ள்ற்ங்ழ்- லண்டனின் பாராளுமன்றம் அமைந்திருக்கும் இடம் இதுதான்) வரையப்பட்டிருந்த ஓவியங்களைக் கிண்டலடித்து வெளிவந்ததை கார்ட்டூன் உலகின் முதல் நையாண்டி முயற்சி என்று குறிப்பிடப்படுகிறது.
|
| |
கவிதாயினி மதுமிதா
ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத் தான். காதலின் மேல் நிற்கும் போது நிற்பவர், இந்த உலகையே மறந்துவிடுவார். நல்லவராகவும் வல்லவராகவும் மாறிவிடுவார். குறிப்பிட்ட இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகம் ஒன்றிற்குள் நுழைந்து விடுவார்கள். பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அவர்களின் ஏவலுக்குக் காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மௌனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள்.
|
| |
தேவை : நுண்கலைப் பல்கலைக்கழகம்
நுண்கலைகளின் பயன்பாடு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. நுண்கலைகளில் ஓவியம், நவீன ஓவிய இயக்கம் ஆகியவை, சுதந்திர இந்தியாவின் ஓவியப் பயிற்சி முறையும் அவற்றிற்கான கல்வி நிலையங்கள் பற்றியும் சிந்தித்துப் பார்க்கும் போது, குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னை ஓவியக்கல்லூரி பற்றி முதலாவதாக நினைக்கத் தோன்றும். இது, 1850களில் இருந்து இயங்கி வருகிறது.
|
| |
ஆகஸ்டு மாதத்தின் கற்பகாம்பாள் கவிதைப் போட்டியில் தேர்வு பெற்று
யுகங்களின் நீடுதுயில்.... யானைத் தீப் பசியுடன் விழிப்பு. கணங்களின் புதைகுழிகளில் நித்திய காலத்தின் சமாதி விடுபட்ட அம்பு போல் இலக்கு நோக்கிய பயணம் காற்றில் திசைதவறித் திரும்பும் எய்தவனை நோக்கி.
|
| |
ஒண்டேரியோ கலைக் கூடத்தில்...
அந்த ஹாலிலும் சரி, ஹென்றி மூரின் சிறிய சிற்பங்கள், கோட்டுச் சித்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மற்ற இரண்டு மூன்று சிறிய அறைகளிலும் சரி, ஆங்காங்கே இருக்கைகள், அவற்றுக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஓடும் ஒலிப்பதிவுகள், அவற்றில், ஹென்றி மூர் பேசுவார், தன் சிற்பங்கள் பற்றி, செய்முறை பற்றி, இயற்கைக்கும் தன் சிற்பங்களுக்குமான உறவு பற்றி எல்லாம். சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே அப்பதிவுகளைக் கேட்கலாம்.
|
| |
ஜீவனுடன் 2 நாட்கள் : போர் சப்பித் துப்பிய எச்சங்களாய்...
காரிலிருந்து இறங்கி, உள்ளே வந்த இளைஞர், "நான் ஜீவன். உலகத்தமிழ் இணையத்தில் நீங்கள் எழுதி வருவதை விடாமல் படித்து வருகிறேன்' என்றார். அட, இணையம் இப்படிக் கூட எங்கெங்கோ இருந்தெல்லாம் அறிமுகங்களையும் நண்பர்களையும் தேடித் தருகிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தது.
|
| |
சிறிய தூண்டில் பெரிய மீன் - 5
அறிமுக விலை. 'படித்துப்பார் எங்கள் தினசரியை" என்பதே சொல்லப்படாத செய்தி. ஒரு ரூபாய் விலைதான் இங்கு தூண்டில். ஏற்கெனவே குறிப்பிட்ட நாளிதழுக்கே பழகிவிட்டவர்களிடம் போய், 'படித்துப் பார் எங்கள் தினசரியை"என்று சொன்னால் கேட்பார்களா? மாட்டார்கள். அதைச் செய்ய வைப்பதற்க்குத் தூண்டில் வேண்டும். புதிய தினசரியைப் படித்துப் பழக, பின்பு அதுவே வேண்டும் என்றாக , அந்த சமயம் விலை மாறினாலும் விட மாட்டார்கள். அது தானே மீன், பெரிய மீன்!
|
| |
ஆளவந்தார்
அடிவயிற்றில் இடி விழுந்தது போலாயிற்று வித்வானுக்கு. "ஆஹா! சிறுபிள்ளையென்று நினைத்து மோசம் போனோமே! மறுப்பதற்கு எள்ளளவும் சாத்தியமில்லாத வாக்கியமல்லவா இது? என்னை அவையில் எல்லார்க்கும் மேலாக அங்கீகரித்து, எனக்கு இத்தனை வசதிகளும் விருதுகளும் வழங்கி ஆதரித்து வரும் அரசரை தர்மவான் இல்லையென்று எப்படிச் சொல்வேன்? தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று? உருவத்தை வைத்து மதிப்பிடுவது தவறென்று இப்போது தெரிகிறது. யமுனைத் துறைவா! நீ என்ன அந்த வாமனனின் மறு அவதாரமா?
|
| |
புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்குப் படைப்புத் திறன் நின்றுவிடும்
இங்கு கலை விமர்சகர் என்று அழைப்பதால், "நீ ஏன் என்னைப் பற்றி எழுதவில்லை' என்று போலித்தனமான ஓவியர் பலர் கேட்கி றார்கள். எனக்கு ஏன் இந்த வெட்டி வேலை? நான் கலை விமர்சகரே இல்லை என்று சொல்லி விட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் இல்லையா? அந்த அடையாளத்தை நான் விரும்பவில்லை. இதற்காகக் கவர்னர் பரிசாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை வேண்டுமானால் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். எங்கே கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
|
|
>>More Headlines
|