| Amudhasurabi |
| |
பட்ஜெட் 2005
உண்மைதான், இந்த பட்ஜெட் நல்ல பட்ஜெட்தான். புதிய திட்டங்கள் பல கொண்டுவந்துள்ளார்கள். இந்தத் திட்டங் களால் யாருக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பற்றிய கவனம் போதுமான அளவு யாருக்கும் இருப்பதில்லை. இந்தப் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகப்படியாகாமல் ஓரளவு கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ஆண்டு வரவு செலவுகளில் பற்றாக்குறை விகிதம் ஓரளவு குறைந்திருப்பது ஒரு பெரிய சாதனை. வரும் ஆண்டில் அது மேலும் கணிசமாகக் குறையுமா என்பதுதான் சந்தேகம்.
|
| |
இராணி இரஸாமணி
பச்சைக் கிளிக்குப் பல்இல்லை பெட்டைக் கோழிக்குக் கிரீடமில்லை அத்தி மரத்துக்குப் பூ இல்லை நதி பின் செல்வதில்லை பின்னே செல்வதில்லை (நாம்) கோஷ்டியாக சிவன் விஷமருந்தி தொண்டையில் அடக்கி பார்வதி தியானத்திலமர்ந்து சிவா கண்களைத் திறக்க வழி விடு, வழி விடு, மங்களகரமான அன்னியர்களே மலடிகூட குழந்தை பெறுவாள் சிவன் விரும்பினால்
|
| |
கவிதைகள்
இதுதான் சாலை கண்மணியே! - நீ எங்கே செல்ல விரும்புகிறாய்? இதன்மேல் எத்தனை வாகனங்கள்! - நீ எதிலே செல்ல விரும்புகிறாய்? முதலில் செல்வது முக்கியமா?- நீ முழுதாய்ச் செல்வது முக்கியமா?
|
| |
எத்தனை கோடி வளங்கள்!!!
நாம் மரபுசார் வளங்களை முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தக் கற்றுக்கொள் வதுடன் உடனடியாக மாற்று எரிசக்தி வளங்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்து வதன் மூலம் வருங்காலத்தினை வளமானதாக ஆக்கிக்கொள்ளலாம். அத்தகைய எரிசக்தி வளங்கள் பின்வருமாறு:- 1.சூரிய ஒளிச் சக்தியும் வெப்ப சக்தியும் 2.காற்றுச் சக்தி 3.உயிரியல், தாவர உயிரியல், கழிவுப் பொருள்களின் சக்தி 4.பிற மாற்று எரிசக்தி வளங்கள்
|
| |
அனைத்துலக நகரம் ஆரோவில்லில் மாற்று எரிசக்தி ஆய்வுகள்
இன்றைய நாளில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 1800 ஆரோவில்வாசிகள் பன்னாட்டு ஆரோவில் மையங்களுடன் இணைந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 5000 பணியாளர்களின் உழைப்பு உதவியுடன் 50,000 பேர் வசிக்கத் தகுந்த பசுமை வளையத்துடன் நவீன கட்டடங்களைக் கொண்ட இந்த ஆன்மீக நகரைத் திட்ட மிட்டு அமைத்து வருகின்றனர்.
|
| |
இங்கு கனவு காண்பது கற்றுத் தரப்படும்...
நலவாழ்வு குறித்த பிரகடனத்தில் நம் மண் சார்ந்த மூலிகைகள் எப்படி மருத்து வத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும், உலக வர்த்தகத்தில் மூலிகை மருத்துவத்தில் சீனம் பங்கு பெறுமளவு நாம் பங்களிப்புச் செய்யாமலிருக்கும் குறைபாடும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சோற்றுக் கற்றாழைக்கு இவ்வளவு மருத்துவ குணமா என்று வியக்க வைக்கும் உதாரணமொன்று மென்மை யாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
|
| |
கவிதாயினி குட்டி ரேவதி
படைப்பாளியின் சமையல் அறையில் மொழி முதலில் ஒன்றும் தெரியாததுபோல் அஞ்சறைப் பெட்டிகளுக்குள் அமர்ந்திருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை நாள்தோறும் சமைக்கும்போது மொழி, தன் சுவையை இழந்துகொண்டே வருகிறது. புதுமையான சமையலில் மொழி, இதுவரை காட்டாத சுவைகளை வெளிப்படுத்திவிடும். புதுவிதக் கலவைகளை உண்டாக்கும்போது அந்த உணவால் ஊரே மணக்கும். நல்ல உணவானது, சூடு, சுவை, மணம், ஆற்றல் ஆகிய நான்கையும் தருவதாய் இருக்கும். நல்ல படைப்பாளி ஒரே மாதிரி சமைக்கமாட்டார். வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைகளில் ஈடுபடுபவரைப் போல் அவரிடம் ஒரு தொடர்ந்த ஆய்வு இருக்கும்.
|
| |
நூல் நயம்
பங்குச் சந்தையில் லாபம் : ப. ந. ஜெயராம் குரு தஷிணாமூர்த்தி சுவாமிகள் அருளுரை : கி. நாகராசன் அருளாளர்கள் : கவிக்கோ ஞானச்செல்வன் எனது கனவில் இந்தியா : அ. முகமது இஸ்மாயில் இந்தியக் குடும்பங்களில் பெருகும் பிரச்சனைகள் : கடமை யள் அன்பு
|
| |
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு : நூல் நயம்
பல்வேறு மொழிகளில் கூறப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றுதான் என்ற கருத்துக்கு விளக்கவுரையாக வந்திருப்பவை தாம் எழுத்தாளர் சிவசங்கரியின் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' வரிசைத் தொகுப்புகள். ஏற்கெனவே வெளியான இரண்டு தொகுப்புகளைத் தொடர்ந்து மேற்குத் திசை மாநிலங்களான கோவா, மகாராஷ்டிரம், குஜராத், சிந்து ஆகியவற்றின் இலக்கிய முயற்சிகளைச் சிவசங்கரி தமது மூன்றாவதான இந்தத் தொகுப்பில் திரட்டித் தந்திருக்கிறார்.
|
| |
படிக்கக் கிடைத்தவை : நூல் நயம்
விக்கிரமாதித்யன் நிறைய எழுதுகிறவர். நீண்ட காலமாக எழுதி வருகிறவர். அவர் கவிதைகள் வெளிவராத பத்திரிகைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் உடன் பதில் சொல்லிவிட முடியாது. அவர் ஒரு சுவாரஸ்யமான கவிஞர், மனிதர். பொஹீமியன் என்று சொல்வார்கள், ஆங்கிலத்தில். தன் இச்சையாக தன் வழி செல்பவர். சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் அவருக்கு உவப்பதில்லை. கவிஞராகவும் அவர் ஒரு பொஹீமியன் தான். அவர் தன் கவிதைகளில் சொல்ல எடுத்துக் கொள்ளும் விஷயங்களும் சரி, கவிதை மொழியும் சரி, அவருடையதேயானவை. அம்மொழியும் வேண்டும் நமக்கு. அவ்விஷயங்களும் வேண்டும் நமக்கு.
|
|
>>More Headlines
|